இந்தோனேசியாவில் 114 வைத்தியர்கள் கொரோனாவால் மரணம்!

118434573 coronadeathgettyimages 1232763475
118434573 coronadeathgettyimages 1232763475

இந்தோனேசியாவில் ஜூலை மாத முற்பகுதியில் அதிகளவான வைத்தியர்கள் கொவிட்-19 நோயால் மரணித்ததாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தின் முதல் 17 நாட்களுக்குள், 114 வைத்தியர்கள் மரணித்ததாக இந்தோனேசிய வைத்தியர்கள் சங்கத்தை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கொவிட்-19 பரவல் ஆரம்பித்த காலம் முதல் இதுவரையில் 545 வைத்தியர்கள் இந்தோனேசியாவில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்டா திரிபு காரணமாக கொரோனா பரவல் நிலை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது