தண்ணீர் குடிக்க 20 நிமிடம் ஒதுக்கீடு!!

drinking water
drinking water

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் அனைத்து பாடசாலைகளிலும் ‘குடிநீர் பெல்‘ முறை அமல்படுத்த மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

கர்நாடகத்தில் அரசு மற்றும் தனியார் பாடசாலைகளில் படிக்கும் குழந்தைகள் சரியாக குடிநீரை குடிப்பது இல்லை என்றும், அதனால் உடல் ரீதியாக சில பாதிப்புகள் ஏற்படுவதாகவும் நீண்ட காலமாக புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் மாநில அரசு இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.

அதில் காலையில் ஒரு முறை, மதிய உணவுக்கு பிறகு என ஒரு முறை ஒரு நாளைக்கு 2 முறை இந்த ‘குடிநீர் பெல்‘ ஒலிக்க செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு முறையும் 10 நிமிடம் வீதம் 20 நிமிடம் ஒதுக்க வேண்டும்.

இந்த 20 நிமிடத்தில் குழந்தைகள் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.