தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிட்டால் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்படும்!

download 3 2
download 3 2

பாகிஸ்தானில் இதுவரையில் 10 இலட்சத்து 58 ஆயிரத்து 405 பேர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 23, 702 பேர் மரணித்துள்ளனர்.

இந் நிலையில் அங்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முடங்கி கிடப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தேவையானளவு தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதுடன், தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை என பாகிஸ்தான் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கிடையே, தடுப்பூசி செலுத்திக்கொள்ளாவிட்டால் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்படும், வெளியிடங்களுக்கு செல்ல அனுமதி இல்லை, பணிக்கு செல்ல அனுமதி இல்லை மற்றும் சம்பளம் வழங்கப்படாமை போன்ற அதிரடி தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது தடுப்பூசி செலுத்தும் மையங்களில் மக்கள் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக்கொள்வதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.