ஆப்கானிஸ்தானின் 5 முக்கிய தலைநகரங்களை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்

542079
542079

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கடந்த மூன்று நாட்களில் 5 முக்கிய மாகாண தலைநகரங்களை கைப்பற்றியுள்ளனர்.

நேற்றைய தினம் மூன்று மாகாண தலைநகரங்களை அவர்கள் கைப்பற்றியதாக அறிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் குண்டூஸ், சார்-இ-போல் மற்றும் தலோகான் ஆகிய பகுதிகளை கைப்பற்றியுள்ளதாக தலிபான்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விடயம் குறித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள தலிபான்கள் குண்டூஸ் பகுதியிலுள்ள காவல்துறை தலைமையகம், ஆளுநர் அலுவலகம் உள்ளிட்டவை தமது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று மதியம் கடுமையான மோதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 14 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதாக குண்டூஸ் மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் சுமார் 30 பேர் வரை காயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.