இந்தியாவில் கொவிட் மரணங்கள் குறைந்து வருகின்றது

113766981 iranhospital
113766981 iranhospital

இந்தியாவில் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கையும், மரணங்களின் எண்ணிக்கையும் வீழ்ச்சியடைந்து வருகின்றன. இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 28 ஆயிரத்து 204 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இது கடந்த தினத்தை விடவும் 20 சதவீத வீழ்ச்சியாகும் என்றும் கடந்த 5 மாதங்களில் நாளொன்றில் பதிவான ஆகக்குறைந்த நோயாளர்களின் எண்ணிக்கையுமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இந்தியாவில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 19 இலட்சத்து 98 ஆயிரத்து 158 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் நேற்றைய நாளில் 373 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதன்படி இந்தியாவில் கொவிட்-19 தொற்றால் மரணித்தோரின் எண்ணிக்கை 4 இலட்சத்து 28 ஆயிரத்து 628 ஆக அதிகரித்துள்ளது. 3 கோடியே 11 இலட்சத்து 80 ஆயிரத்து 968 பேர் குணமடைந்துள்ளனர். 3 இலட்சத்து 88 ஆயிரத்து 508 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.