அமெரிக்காவில் கடற்படை வீரர்கள் ‘டிக்-டொக்’ அப் ஐ பயன்படுத்த தடை

3 rty
3 rty

அமெரிக்காவில் கடற்படை வீரர்கள் ‘டிக்-டொக்’ அப் ஐ பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமான ‘பேஸ்புக்’  இற்குப் பிறகு ‘டிக்-டொக்’ எனும் அப் உலகம் முழுவதும் கோடிக் கணக்கானோரால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. சீனாவில் உருவாக்கப்பட்ட ‘டிக்-டொக்’ அப் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்தவகையிலேயே, அமெரிக்க அரசால் அந்நாட்டு கடற்படை வீரர்களுக்கு அளிக்கப்பட்ட செல்போன்களில் ‘டிக்-டொக்’ செயலியை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்க கடற்படையின் ‘பேஸ்புக்’ பக்கத்தில்,“பாதுகாப்பு விதிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் ‘டிக்-டொக்’ செயலி உள்ளது. எனவே அரசால் அளிக்கப்பட்டுள்ள செல்போன்களில் இருந்து அந்த செயலியை உடனடியாக நீக்க வேண்டும். இல்லையெனில், கடற்படையின் இன்ட்ராநெட் சேவையால் அந்த செல்போன்கள் முடக்கப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.