ஆப்கானிஸ்தானில் மேலுமொரு நகரத்தை தலிபான்கள் கைப்பற்றினர்

119919903 gettyimages 1234646611
119919903 gettyimages 1234646611

வட ஆப்கானிஸ்தானில் உள்ள முக்கியமான நகரமான மசார் ஐ ஷரீப் நகரத்தையும் தலிபான் பயங்கரவாதிகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள பல முக்கிய நகரங்களை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ள தலிபான்கள், தற்போது தலைநகர் காபூலை நோக்கி நகர்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது வரை 7 இலட்சத்து 50 ஆயிரம் பொது மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தலைநகர் காபூலை நோக்கியே செல்வதாக அங்கு நிலை கொண்டுள்ள வெளிநாட்டு செய்தி ஸ்தாபனங்கள் தெரிவித்துள்ளன.