தலிபான்களின் வட்ஸ் எப் கணக்குகள் முடக்கம்!

201912252301156772 Twentyseven peace activists abducted by Taliban in western SECVPF
201912252301156772 Twentyseven peace activists abducted by Taliban in western SECVPF

தலிபான்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் வட்ஸ் எப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அவர்கள் பயங்கரவாதிகளாகவே கருதப்படுவதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலிபான்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் கணக்களை நீக்குவதற்கு நேற்று முகநூல் நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்தநிலையில், முகநூல் நிறுவனத்தின் மற்றுமொரு நிறுவனமான வட்ஸ் எப்’ பிலும் குறித்த நடைமுறை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஆப்கானிஸ்தானில் ட்விட்டர் தொடர்ந்தும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் நிலைமை மாறிவருவதன் காரணமாக பொதுமக்கள் ட்விட்டர் மூலம் உதவிகளை கோரிவருவதனை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்படுவதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் பொதுமக்களின் பாதுகாப்பிற்கும், நன்மைக்கும் முக்கியத்தும் அளிக்கும் வகையில் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்தும் ட்விட்டர் சேவை முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.