ஆப்கானிஸ்தான் ஏதிலிகள் எமது நாட்டில் குடியமர்த்தப்படுவார்கள் – பிரித்தானியா

37242170 303
37242170 303

ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் ஏதிலிகள் தமது நாட்டில் குடியமர்த்தப்படுவார்கள் என பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஆண்டுகளில் 20,000 ஆப்கானிஸ்தானியர்களுக்கு வீடுகளை நிர்மாணித்து கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அந்த நாட்டு உள்விவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம், முதல் ஆண்டில் 5,000 ஆப்கானிஸ்தான் ஏதிலிகளுக்கு குடியுரிமை வழங்கவும், பின்னர் 5,000 பேருக்கு அந்நாட்டில் தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பெண்களினதும், விசேட தேவையுடையவர்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக அவர்களுக்கு முன்னுரிமை வழங்கவும் பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதேவேளை, ஆப்கானிஸ்தானில் நிலைக்கொண்டிருந்த அமெரிக்க துருப்புகளை மீள பெறும் நடவடிக்கையினை அமெரிக்கா முன்னெடுத்திருந்தது.

இதன்காரணமாக தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதனையடுத்து அங்கு மனித உரிமை மீறல்கள் இடம்பெறக்கூடும் என்ற அச்சத்தில் ஆப்கானிஸ்தானிய மக்கள் அந்த நாட்டில் இருந்து வெளியேறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.