சவுதி விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல், 8 பேர் காயம்!

thumb abha
thumb abha

சவுதி அரேபியாவின் தென்மேற்கு விமான நிலையம் மீது வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட ட்ரோன் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அந் நாட்டு அரச தொலைக்காட்சிகள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன. தாக்குதலில் எட்டுப் பேர் காயமடைந்துள்ளதுடன், ஒரு சிவில் விமானமும் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் அபா விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது தாக்குதல் இதுவாகும். முன்னதாக நடந்த தாக்குதலில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. தற்போதைய தாக்குதலுக்கு ஹவுத்தியினர் பொறுப்பேற்றுள்ளனர்.

கடந்த பல மாதங்களாக, சவுதி அரேபியா அண்டை நாடான யேமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்களின் பல தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளது. அங்கு அரசுப் படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு மோதல் தொடர்ந்து நடந்து வருகிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ரியாத், ஏமன் அரசுக்கு ஆதரவளித்து வருகிறது. ஹவுத்திகளுக்கு எதிராக விமானம், நிலம் மற்றும் கடல் வழித் தாக்குதல்களை நடத்துகின்றனர். ஹவுத்திகள் பதிலடி தாக்குதல்களை அடிக்கடி அரேங்கேற்றுகின்றனர். இந்த தாக்குதலுக்கு ஹவுத்தி இராணுவ அதிகாரிகள் பலமுறை பொறுப்பேற்றுள்ளனர்.