மும்பை விமான நிலையத்திற்கு வருபவர்களுக்கு கொவிட் பரிசோதனை கட்டாயம்!

1595357852 5764
1595357852 5764

சி.1.2 என்ற புதிய கொரோனா வைரஸ் திரிபு வெளிநாடுகளில் கண்டறியப்பட்டதை அடுத்து, மும்பை விமான நிலையத்திற்கு வரும் சர்வதேச பயணிகளுக்கான விதிமுறைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மும்பை மாநகராட்சி அமைப்பு இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இங்கிலாந்து, ஐரோப்பா, மத்திய கிழக்கு, தென்னாபிரிக்கா, பிரேஸில், பங்களாதேஷ், பொஸ்த்வானா, சீனா, மொரிஸியஸ், நியூஸிலாந்து மற்றும் ஸிம்பாப்வே முதலான நாடுகளில் இருந்து வரும் பயணிகள், தங்களது சொந்த செலவில் விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட அதிக வீரியம் மிக்க சி.1.2 கொரோனா திரிபு, கொங்கோ, மொரிஸியஸ், போர்த்துக்கல், நியூஸிலாந்து மற்றும் சுவிட்சர்லாந்து முதலான நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் திரிபு, இதுவரையில் இந்தியாவில் அடையாளம் காணப்படவில்லை என அரசாங்கத் தகவல்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.