எகிப்தில் போதைப்பொருள் கடத்திய 7 பாகிஸ்தானியர்களுக்கு மரண தண்டனை!

Rarest of Rare Case Death Penalty min
Rarest of Rare Case Death Penalty min

எகிப்து நாட்டில் ஹெரோயின் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 7 பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2019 ஆம் எகிப்தின் செங்கடல் வழியே 2 டன் எடை கொண்ட ஹெரோயின் போதை பொருள் கடத்தல் சம்பவமொன்று இடம்பெற்றது.

இதனையடுத்து கடத்தப்பட்ட ஹெரோயின் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. அவ்வாறு கைப்பற்றப்பட்ட ஹெரோயின் பெறுமதி 1,167 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுபற்றிய விசாரணையில் எகிப்து நீதிமன்றம், இந்த கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய பாகிஸ்தானியர்கள் 7 பேருக்கு மரண தண்டனை வழங்கியுள்ளது.

இதேபோன்று 2 எகிப்தியர்கள் மற்றும் ஈரானியர் ஒருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று கடந்த 2016 ஆம் ஆண்டில் 44 பேருக்கும், 2017 ஆம் ஆண்டில் 35 பேருக்கும், 2018ஆம் ஆண்டில் 43 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.