கியூபாவில் 2 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி!

Caregivers children day care centre
Caregivers children day care centre

உலகளாவிய ரீதியில் முதன்முறையாக கியூபாவில் 2 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நாடுகள் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை துரித கதியில் முன்னெடுத்து வரும் நிலையில், கியூபாவில் குறித்த நடவடிக்கை நேற்று முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சீனா, ஐக்கிய அரபு இராச்சியம், வெனிசூலா ஆகிய நாடுகள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு முன்னதாக திட்டமிட்டிருந்தன. எனினும், குறித்த நாடுகளில் இன்னும் அந்த பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை.

ஏனைய சில நாடுகள் 12 வயதிற்கு மேற்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை முன்னெடுத்துள்ளன.

இந்நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் கியூபாவில் பாடசாலைகளை கட்டம், கட்டமாக திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக சகல பாடசாலை மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த அந்த நாட்டு சுகாதாரத்துறை தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, கடந்த வெள்ளிக்கிழமை 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கியூபாவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.