ஸ்பெயினில் காட்டுத் தீ ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் இருந்து வெளியேற்றம்!

PRI 198771654
PRI 198771654

ஸ்பெயினின் தென் பிராந்தியமான அண்டலூசியாவில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக சுமார் 2,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

கோஸ்டா டெல் சோலில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா நகரமான எஸ்டெபோனாவில் புதன்கிழமை ஆரம்பித்த தீ விபத்தில் சிக்கி தீயணைப்பு வீரர் உயிரிழந்துள்ளார்.

மலைப்பகுதியில் பரவி வரும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்களுடன் ராணுவப் பிரிவும் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

இதனால் அங்கு வசிக்கும் ஆறு நகரங்கள் மற்றும் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இந்த கோடை காலத்தில் ஐரோப்பா நாடுகள் சில பல காட்டுத்தீக்கு உள்ளாகிவருகிறது. காலநிலை மாற்றம் காட்டுத்தீயைத் தூண்டும் வெப்பமான, வறண்ட வானிலையின் அபாயத்தை அதிகரிக்கிறது.

தொழில்துறை சகாப்தம் ஆரம்பித்ததிலிருந்து உலகம் ஏற்கனவே சுமார் 1.2செல்சியஸ் வெப்பமடைந்துள்ளது எனவும் மேலும் முறையான நடவடிக்கையை உலக நாடுகள் எடுக்காவிடின் வெப்பநிலை உயரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.