நரேந்திர மோடி மற்றும் கமலா ஹாரிஸுக்கு இடையில் சந்திப்பு

screenshot21016 1632446160
screenshot21016 1632446160

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வம்சாவளி அமெரிக்க உப ஜனாதிபதி கமலா ஹரிஸை சந்தித்துள்ளார்.

வொஷிங்டனில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

அத்துடன், தங்களை வரவேற்க இந்திய மக்கள் காத்திருப்பதாகவும் அமெரிக்க உப ஜனாதிபதி கமலா ஹரிஸிடம், இந்தியப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் விஜயமாக அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை இன்று அவர் சந்திக்க உள்ளார்.