சீனாவில் மீண்டும் கொவிட் தொற்றாளர்கள்

download 26
download 26

சீனாவில் மீண்டும் கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 38 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக சீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதேநேரம் நேற்று முன்தினம் அங்கு 54 நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

எனினும் இந்தக் காலப்பகுதிகளில் எந்தவொரு நோயாளரும் கொவிட்19 தொற்றினால் மரணிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக அடையாளம் காணப்பட்ட நோயாளர்களில் 14 பேருக்கு எந்தவொரு நோய் அறிகுறியும் தென்பட்டிருக்கவில்லை என சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களுக்கு சீனா தடுப்பூசி வழங்குவதை துரிதப்படுத்தி வருகின்றது.