அமெரிக்காவில் தொடருந்து தடம்புரண்டதில் மூவர் பலி!

rer 2
rer 2

அமெரிக்க மொண்டானா மாவட்டத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டதையடுத்து, மூன்று பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

இதுதவிர, 50 பேருக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், ஏனைய பயணிகள் பாதுகாப்பாகத் தொடருந்து பெட்டிகளிலிருந்து மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு இட்டுச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்தம் இடம்பெற்ற வேளையில் தொடருந்தில் 147 பயணிகளும் 13 பணியாளர்களும் இருந்ததாகத் தொடருந்து தரப்பினரால் விடுக்கப்பட்ட அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.