வட ஆந்திர பிரதேசத்தில் சூறாவளி தாக்கும் அபாயம்!

201103105502 01 hurricane eta 1103 nicaragua exlarge 169
201103105502 01 hurricane eta 1103 nicaragua exlarge 169

வட ஆந்திர பிரதேசத்தில் கரையோர மாவட்டங்களை இன்று மாலை ‘குலாப்’ எனப் பெயரிடப்பட்டுள்ள சூறாவளி தாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூறாவளி ஒடிசா பிராந்தியத்தின் கோபல்பூர் மற்றும் காளிங்கபட்டனம் என்பனவற்றிற்கு இடையே கடந்து செல்லும்போது அதன் வேகம் மணிக்கு 95 கிலோ மீட்டராக இருக்கும் என இந்திய காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இந்த அனர்த்தத்தை எதிர்கொள்ள ஏற்கனவே 18 மீட்பு குழுக்கள் உருவாக்கப்பட்டு பாதிப்பு ஏற்படும் என அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மீட்பு பணி இயக்குனர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இது தவிர கரையோர பிரதேச தொடருந்து சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளன.