ஐஸ்லாந்து நாடாளுமன்றில் பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கையில் மாற்றம்!

universitet v reikyavike islandiya
universitet v reikyavike islandiya

நிறைவடைந்த ஐஸ்லாந்து தேர்தல் தொடர்பில் முதலில் வெளியான பெறுபேறுகளின்படி 63 ஆசனங்களை கொண்ட நாடாளுமன்றத்தில் 33ல் பெண்கள் வெற்றி பெற்றதாக கருதப்பட்டதையடுத்து, சர்வதேச ரீதியாக அதிக பெண்களை கொண்ட நாடாளுமன்றம் என்ற சாதனையினை ஐஸ்லாந்து படைத்துள்ளதாக கருதப்பட்டது.

இருப்பினும் மீள மேற்கொள்ளப்பட்ட எண்ணிக்கையின்படி அந்த சாதனையினை பெறும் வாய்ப்பு இழக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது எண்ணிக்கைக்கு அமைய 63 ஆசனங்களில் 30 ஆசனங்களை மட்டுமே பெண்கள் வெற்றி பெற்றதாக நாடாளுமன்ற தேர்தல் ஒன்றியம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் சர்வதேச ரீதியாக ருவண்டா, கியூபா, நிக்கராகுவா, மெக்சிக்கோ, ஐக்கிய அரபு ராட்சியம் ஆகிய ஐந்து நாடுகளில் உள்ள நாடாளுமன்றங்களில் பெண்களின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர, 1980 ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பெண் ஜனாதிபதி ஐஸ்லாந்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

29 யூன் 1980 ஆம் ஆண்டு தேர்தல் மூலம் தெரிவான விக்டிஸ் பின்போகாடொற்றியர் 16 வருடங்கள் ஐஸ்லாந்தின் ஜனாதிபதியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.