உலகளாவிய கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 50 இலட்சத்தைக் கடந்தது

corona
corona

உலகளாவிய ரீதியில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 50 இலட்சத்தைக் கடந்துள்ளது.

கொவிட் பரவல் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து ஒரு வருடத்திற்கு மேலாக 25 இலட்சம் கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், எஞ்சிய 25 இலட்சம் கொவிட் மரணங்களும் 8 மாதங்களுக்கும் குறைவான காலப்பகுதியில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவற்றில் பெரும்பாலான மரணங்கள் அமெரிக்கா, ரஷ்யா, பிரேசில், மெக்சிகோ மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் பதிவாகியுள்ளன.

ரோய்ட்டர்ஸ் முன்னெடுத்த பகுப்பாய்வின்போது உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு நிமிடத்திற்கு 5 பேரும், நாளாந்தம் சுமார் 8,000 பேரும் கொவிட் தொற்றால் மரணிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், கடந்த சில வாரங்களாக உலகளாவிய கொவிட் மரணங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது