பொருளாதார பின்னடைவினை சீர்செய்வதற்கு ஏற்ற உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் – பிரித்தானிய பிரதமர்

111644558 f3725097 4a19 4a56 832d 50c4305b7672
111644558 f3725097 4a19 4a56 832d 50c4305b7672

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார பின்னடைவினை சீர்செய்வதற்கு ஏற்ற உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜொன்சன் தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்று காரணமாக வேலைவாய்ப்பினை பெற்ற வெளிநாட்டு தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் தமது பணியிலிருந்து விலகியுள்ளனர்.

இதன் காரணமாக எரிபொருள் நிலையங்களில் விநியோக பணிகள் முற்று முழுதாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் பிரித்தானியாவில் உள்ள சகல எரிபொருள் விநியோக நிலையங்களையும் இயங்க வைக்க இராணுவத்தினர் சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் நாளை (04) தமது பணியினை ஆரம்பிக்கவுள்ள நிலையில், எரிபொருள் விநியோகங்கள் வழமைக்கு திரும்பும் எனவும் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜொன்சன் உறுதியளித்துள்ளார்