சோறு சமைப்பானை மணந்து 4 நாட்களில் விவாகரத்து செய்த இளைஞன்

975713 pjimage 2
975713 pjimage 2

இந்தோனேசியாவைச் சேர்ந்த இளைஞரான கொய்ருல் அனம் என்பவர் பல விசித்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்வதன் மூலம் சமூக வலைத்தளங்களில் பிரசித்தமானவர்.

அண்மையில் அவர் மணமகன் போல் உடையணிந்து சோறு சமைப்பானை (Rice cooker)மணமகள் போல அலங்கரித்து, அதைத் திருமணம் செய்து கொண்டதாகத் தனதுமுகநூல் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.

மேலும் அவர், குறித்த சோறு சமைப்பான் வெள்ளையாகவும், அன்பாகவும் இருப்பதாகவும் அதற்கு நன்றாகச் சமைக்கத் தெரியும் என்பதுடன், தான் சொல்வதைக் கேட்டு நடக்கும் என்பதாலும் அதைத் திருமணம் செய்வதாக அந்தப் பதிவில் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், 4 நாட்கள் கழித்து அது வெறும் சோற்றை மட்டும் சமைப்பதால் அதை விவாகரத்து செய்வதாகக் கூறினார்.

அவர் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக வேண்டும் என்ற நோக்கத்தில் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.