ஐ.நா பாதுகாப்பு சபை இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக வடகொரியா குற்றச்சாட்டு!

K 4 Ballistic missile
K 4 Ballistic missile

கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட புதிய ஏவுகணை பரிசோதனை தொடர்பில்  ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாக வடகொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பான பாதுகாப்பு சபையின் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

தென்கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து மேற்கொள்ளும் இராணுவ பயிற்சிகள் குறித்து மௌனம் சாதிக்கும் பாதுகாப்பு சபை, தமது நாட்டின் தற்காப்பு நடவடிக்கைகளுக்காக முன்னெடுக்கும், ஏவுகணை பரிசோதனை தொடர்பில் அதிக கவனம் செலுத்துவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டினை வடகொரிய வெளிவிவகார அமைச்சின் சர்வதேச விடயங்களுக்குப் பொறுப்பான பணிப்பாளர் ஜோ சொல் சூ முன்வைத்துள்ளார்.