அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி டுடெர்டே!

FAtQNSPWQAgOFt0
FAtQNSPWQAgOFt0

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்டே அடுத்த ஆண்டு தேர்தலில் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என்றும் பதவிக்காலம் முடிந்த பிறகு அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸின் அரசியலமைப்பு ஜனாதிபதிகளை ஒரே ஆறு ஆண்டு காலத்திற்கு மட்டுமே அனுமதிக்கும்.

இந் நிலையில் 76 வயதான டுடெர்டே, 2022 தேர்தலில் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடப் போவதாக கடந்த மாதம் கூறினார். 

இந் நிலையில் அவர் சனிக்கிழமை மேற்கண்ட முடிவினை அறிவித்துள்ளார்.

அவரது மகள் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடலாம் என்று ஊகங்களுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டுடெர்டே ஒரு சர்ச்சைக்குரிய வலிமையான ஜனாதிபதி ஆவார். 

2016 இல் அதிகாரத்துக்கு வந்ததிலிருந்து குற்றங்களைக் குறைப்பதாகவும் நாட்டின் போதைப்பொருள் நெருக்கடியை சரிசெய்வதாகவும் உறுதியளித்தார்.

ஆனால் அவரது ஐந்து வருட ஆட்சியில் போதைப்பொருளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக ஆயிரக்கணக்கான சட்டவிரோத கொலைகள் இடம்பெற்றுள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.