பீஜிங் மரதன் போட்டி காலவரையின்றி பிற்போடப்பட்டது!

unnamed 7
unnamed 7

சீனா பீஜிங் மரதன் போட்டியை காலவரையின்றி பிற்போடப்பட்டுள்ளது.

இந்த மாதம் 31 ஆம் திகதி குறித்த போட்டியை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் கொவிட்-19 காரணமாக குறித்த போட்டி பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 30,000 பேர் வரை இந்த மரதன் போட்டியில் பங்கேற்க இருந்துள்ளனர்.

சீனாவின் உள்ளூர் விளையாட்டு போட்டிகளில் பீஜிங் மரதன் போட்டி முக்கிய போட்டியாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.