அமெரிக்காவில் 5 – 11 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கொவிட் தடுப்பூசி!

IMG 20210912 073846 480x330 1
IMG 20210912 073846 480x330 1

பைஸர் பயோன்டெக் கொவிட்-19 தடுப்பூசியை 5 முதல் 11 வயதுக்கு இடைப்பட்ட சிறார்களுக்குச் செலுத்த அமெரிக்க சுகாதார அதிகாரிகள் அனுமதியளித்துள்ளனர்.

இதற்கமைய, 28 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க சிறார்களுக்கு பைஸர் தடுப்பூசியைச் செலுத்தும் நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக வெளிநாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

பிரதிபலன் மற்றும் பக்கவிளைவு என்பன தொடர்பில், உயர்மட்ட மருத்துவ ஆலோசனை சபையின் விரிவான மதிப்பீடுகளின் பின்னரே, ஐந்து வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்த அனுமதியளித்துள்ளது.

தற்போதுவரை சீனா, சிலி, கியூபா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் முதலான நாடுகள், ஐந்து வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்குத் தடுப்பூசி வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.