சீரற்ற வானிலையால் அமெரிக்காவில் விமான சேவைகள் இடைநிறுத்தம்!

202007070335197984 Tamil News 8 dead after two planes collide in the air in America SECVPF
202007070335197984 Tamil News 8 dead after two planes collide in the air in America SECVPF

சீரற்ற காலநிலை காரணமாக அமெரிக்க வானூர்தி நிறுவனம் நூற்றுக்கணக்கான விமான சேவைகளை ரத்து செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றும் நேற்று முன்தினமும் 800 இற்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று 400 இற்கும் மேற்பட்ட சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மழையுடன் கூடிய காற்று காரணமாகப் பணியாளர்களை கடமை செய்யும் இடங்களுக்கு அனுப்ப முடியாமல் போய் உள்ளதாக அமெரிக்க வானுர்தி சேவையின் தலைமை நிறைவேற்று அதிகாரி டேவிட் சேமோர் தெரிவித்துள்ளார்.

பிறக்கப்போகும் புதிய மாதத்துடன் சேவைகள் படிப்படியாக வழமைக்கு கொண்டுவர முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, அமெரிக்க வானூர்தி சேவை நாளாந்தம் உலகளாவிய ரீதியாக 6 ஆயிரத்து 700 சேவைகளை மேற்கொள்கின்றது.

இந்த சேவைகள் 50 நாடுகளில் உள்ள 350 வானூர்தி நிலையங்களுடன் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.