இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வாழும் மக்களுக்கு புதிய வீடுகள் நிர்மாணம்!

1600x960 335929 image credit official twitter handle of high commission of india in colombo sri lanka
1600x960 335929 image credit official twitter handle of high commission of india in colombo sri lanka

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் முதற்கட்டமாக 3,510 புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்காக, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று(02) வேலூர் – மேல்மொணவூரில் அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த அடிக்கல் நாட்டு விழா வேலூர் – மேல்மொணவூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய விளையாட்டுத்திடலில் இடம்பெற்றது.

இந்தத் திட்டத்தின் மூலம் தமிழக, முகாம்களில் வாழும் 19,046 இலங்கை தமிழர்களின் குடும்பத்தினர் நன்மையடையவுள்ளனர்.

இதற்காக இந்திய ரூபாவில்142.16 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 106 முகாம்களில் வசிக்கும் புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு பாதை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய குடியிருப்புகள் விரைவில் நிர்மாணிக்கப்படுமென தமிழக அரசாங்கம் அறிவித்துள்ளது.