சிங்கப்பூரில் கொவிட் மரணங்கள் தொடர்பில் எச்சரிக்கை!

singapore image 18042020
singapore image 18042020

சிங்கப்பூரில் எதிர்வரும் காலங்களில் ஆண்டுதோறும் சுமார் 2 பேர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் சிரேஷ்ட இராஜாங்க அமைச்சர் ஜனில் புதுச்சேரி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

சிங்கப்பூர் மிகச்சிறந்த மருத்துவப் பராமரிப்பு உள்ள நாடு என்ற போதிலும், இத்தகைய நிலை ஏற்படக்கூடும் என்றும், அதனை தவிர்க்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

நேற்றைய தினம் மாத்திரம் சிங்கபூரில் 3,496 பேருக்கு தொற்றுறுதியானது.

இந்நிலையில், அங்கு இதுவரையில் கொவிட் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 204,340 ஆக உயர்வடைந்துள்ளது.