உலகளாவிய ரீதியில் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

food
food

உலக உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு 30 சதவீத அதிகரிப்புடன், ஒரு தசாப்தத்தில் அதியுயர் நிலை எட்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில், தானியங்கள் மற்றும் தாவர எண்ணெய்களின் விலைகள் உயர்வடைவதை இந்தப் புள்ளி விபரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

கடந்த ஒக்டோபர் மாதம் சுமார் 10 சதவீத அதிகரிப்புடன், மரக்கறி எண்ணெய் விலை பாரிய அதிகரிப்பை வெளிப்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விநியோகத்தில் ஏற்படும் இடையூறுகள், தொழிற்சாலைகள் மூடல், அரசியல் பதற்ற நிலைகள் என்பன இந்த விலை உயர்வுக்குக் காரணிகளாக அமைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.