சர்வதேச ரீதியில் உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் – ஐ.நா

20 fastfood200
20 fastfood200

சர்வதேச ரீதியில் உணவு உற்பத்தியினை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய பிரிவு இன்று (21) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகளாவிய ரீதியாக உணவு வர்த்தகம் குறிப்பிடத்தக்க வகையில் பின்னடைவை எதிர்கொண்டுள்ளது.

உணவின் விலை நாளாந்தம் அதிகரித்து வருவதனால், பொருளாதாரத்தில் பின்னடைவை கொண்டுள்ள நாடுகள் மேலும் பெரும் சுமையை எதிர்நோக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நுகர்வோர் தமது ஊதியத்தில் கணிசமான தொகையினை தமது உணவிற்காக செலவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டு உலகளாவிய ரீதியாக உணவு இறக்குமதிக்காக நாடுகள் செலவிடும் நிதி முன்னர் எப்பொழுதும் இல்லாத நிலையை கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தொகை இந்த ஆண்டு நிறைவடைவதற்கு முன்னர் 1.75 ரில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது 14 சதவீத அதிகரிப்பு எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.