சோமாலியாவில் பிரபல ஊடகவியலாளர் கொலை!

201806171438384247 Death toll from suicide bombing in Afghanistan climbs to 36 SECVPF
201806171438384247 Death toll from suicide bombing in Afghanistan climbs to 36 SECVPF

சோமாலிய பிரபல ஊடகவியலாளர் ஒருவர் அந்த நாட்டு தலைநகர் மொகடிஷூவில் தற்கொலை குண்டுதாரியினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது கொல்லப்பட்டார்.

அப்டியாஸ் அஃப்ரிக்கா என அழைக்கப்படும் அவர், பயங்கரவாத ஆயுத குழுவான அல்-ஷாபாப்பின் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்டித்து வந்ததுடன், அது குறித்து பல தகவல்களை வெளியிட்டிருந்தார்.

இந்த தாக்குதலின்போது மேலும் இருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கு அல்-ஷபாபே காரணம் என அதன் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடாகவியலாளர் மொகடிஷூ வானொலியுடன் இணைந்து தமக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தமைக்கு பழிவாங்கும் நோக்கிலேயே இந்தத் தற்கொலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது மிலேசத்தனமான பயங்கரவாத நடவடிக்கை என சோமாலிய பிரதமர் மொகமட் ஹூசீன் ரோபில் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் இராணுவ ஒத்துழைப்புடன் செயல்படும் சோமாலிய அரச படைகளுடன் கடந்த ஒரு தசாப்தகாலமாக அல்-ஷாபாப் ஆயுதக்குழு தாக்குதலை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.