செவ்வாய் கிரகத்தில் ரோபோ மூலம் ஒக்சிஜன்

1200px OSIRIS Mars true color
1200px OSIRIS Mars true color

செவ்வாய் கிரகத்தில் ரோபோ மூலம் ஒக்சிஜனை உற்பத்தி செய்ய நாசா திட்டமிட்டுள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய புதிய ரோவர் ரோபோவினை அனுப்பவுள்ளது.

அந்த ரோவரின் புகைப்படத்தினை தற்போது வெளியிட்டுள்ளது நாசா. இந்த ரோவர் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழக்கூடிய சாத்தியம் குறித்து ஆராயவுள்ளது.

இதில் 23 கமராக்கள், 2 மைக்குகள் இணைக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் ஜுலை மாதம் ரோபோ விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் ஒக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து இந்த ரோபோ ஆராயவுள்ளது.