சிங்கப்பூர் – மலேசிய எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டன!

border
border

சிங்கப்பூர் – மலேசியாவுக்கும் இடையிலான எல்லை, பூரணமாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட சுற்றுலாப் பயணிகளுக்காக இன்று முதல் மீளத் திறக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக குறித்த எல்லைகள் 2020 ஆம் ஆண்டு  மார்ச்சில் மூடப்பட்டன.

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே தினமும் சுமார் 300,000 மலேசியர்கள் பயணம் செய்வதுடன், இது உலகின் பரபரப்பான எல்லைப் பகுதியாக கருதப்படுகிறது.

எல்லையை மீண்டும் திறக்கும் நிகழ்வை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வகையில் மலேசிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப், சிங்கப்பூர் சென்றுள்ளார்.

எனினும், புதிய சுகாதார வழிகாட்டல்களின் கீழ், 1,440 பயணிகள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள அதேவேளை, குடியுரிமை, வதிவிட விசா அல்லது நீண்ட காலம் தங்கியிருக்கும் விசாக்களை கொண்டவர்கள் தனிமைப்படுத்தலின்றி சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.