ஜப்பானில் ஒமிக்ரொன் திரிபு தொற்றுடைய முதல் நபர் அடையாளம்!

202109281444366914 Japan to lift all coronavirus emergency steps nationwide SECVPF
202109281444366914 Japan to lift all coronavirus emergency steps nationwide SECVPF

ஜப்பானில் முதன்முறையாக ஒமிக்ரொன் கொவிட் திரிபினால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அந்நாட்டின் ஹோனேடா விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனையில் நமீபியாவைச் சேர்ந்த 30 வயதான ஒருவரிடமே இவ்வாறு ஒமிக்ரொன் திரிபு இனங்காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன், அவருடன் தொடர்பைப் பேணியவர்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எவ்வாறாயினும், இந்தக் கொவிட் திரிபு நாட்டிற்குள் பிரவேசிப்பதைத் தடுக்கும் வகையில் இன்று (30) முதல் ஒரு மாத காலத்திற்கு வெளிநாட்டவர்கள் ஜப்பானுக்குள் பிரவேசிப்பது இடைநிறுத்தப்படுவதாக ஜப்பான் பிரதமர் நேற்று (29) தெரிவித்தார்.