விளாடிமிர் புட்டின் இந்தியாவுக்கு விஜயம்!

download 14
download 14

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இந்தியாவுக்கான விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளார்.

டெல்லியில் இன்று(06) இடம்பெறும் இந்திய – ரஷ்ய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விஜயத்தின்போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உயர் மட்டகுழுவினரையும் அவர் சந்திக்கவுள்ளார்.

உச்சி மாநாட்டின் இறுதியில் இரண்டு நாடுகளுக்கும் இடையேயான 10 முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படும் என குறிப்பிடப்படுகிறது.

இந்த சந்திப்புகளில் பரஸ்பர, பிராந்திய, சர்வதேச அரசியல் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக இந்திய ஊடககங்கள் தெரிவித்துள்ளன.