வால் நட்சத்திரத்தை நாளை வானில் காணக்கூடியதாய் இருக்கும்

static image cdn 1
static image cdn 1

பல ஆண்டுகளுக்கு ஒரு முறை வானில் தோன்றும் வால் நட்சத்திரத்தை நாளை வானில் காணக்கூடியதாய் இருக்கும்.

இந்த நட்சத்திரத்தை வெறும் கண்களால் பார்க்ககூடியதாய் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சி-2021-ஏ- ஒன்று என அறியப்படும் இந்த வால் நட்சத்திரத்திற்கு அமெரிக்க வானியலாளர் கிரெக் லியோனார்டின் நினைவாக லியோனார்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது.

குறித்த நட்சத்திரம் நாளை காலை கனடா உள்ளிட்ட வட அமெரிக்க நாடுகளுக்கு தென்படும்.

அத்துடன், உலகின் ஏனைய நாடுகளுக்கு நாளை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வால் நட்சத்திரம் மீண்டும் தென்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.