பிலிப்பைன்ஸில் கடும் சூறாவளியால் பலியானோர் எண்ணிக்கை 208 ஆக உயர்வு!

56ff5060 a1b90c75 c0b946b7 d14ef567 dfec6bdd 50462244 0f82bc02 court 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 3
56ff5060 a1b90c75 c0b946b7 d14ef567 dfec6bdd 50462244 0f82bc02 court 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 3

பிலிப்பைன்ஸில் கடந்த வியாழக்கிழமை வீசிய கடும் சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 208 ஆக அதிகரித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

‘ராய்’ என்ற இந்த சூறாவளி மணிக்கு 195 கிலோமீற்றர் என்ற வேகத்தில் அந்த நாட்டின் தென்கிழக்கு தீவுகளைத் தாக்கி இருந்தது.

இதனால் சுமார் 3 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், இந்த சூறாவளி காரணமாக 239 பேர் காயமடைந்துள்ளதுடன், 52 பேர் காணாமல் போய் இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்ட இடத்துடனான தொடர்பாடல் முற்றாக தடைபட்டிருப்பதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.