கர்நாடகாவில் கட்டாய மதமாற்றத் தடை சட்டவரைவுக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு!

202012260745259149 Tamil News tamil news Minister Basavaraj Bommai SECVPF
202012260745259149 Tamil News tamil news Minister Basavaraj Bommai SECVPF

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் கட்டாய மதமாற்ற தடை சட்டவரைவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். கர்நாடகாவில் கட்டாய மதமாற்ற தடை சட்டவரைவுக்கு மாநில அமைச்சரவை நேற்று (20) அனுமதியளித்தது. இந்நிலையில், குறித்த சட்டவரைவு இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக நாளை விவாதம் நடத்துவதற்கு சபாநாயகர் விஷ்வாஷ்வார் ஹெக்டே கார்கி அனுமதி வழங்கியுள்ளார்.

எனினும், இந்த சட்டவரைவுக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டி.கே. சிவக்குமார், சட்டவரைவை கிழித்து எறிந்ததாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது. அதன் பின்னர், காங்கிரஸ் கட்சியினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, சட்டமன்றத்தில் இந்த மதமாற்ற சட்டவரைவு குறித்து விவாதிக்க வாய்ப்பு வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால் எதிர்க்கட்சிகள் விவாதிக்க தயாராக இல்லை. இது அரசின் தவறல்ல என மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.