அஸ்ட்ராஜெனெகாவின் பூஸ்டர் ஷாட் ஒமிக்ரோனுக்கு எதிராக செயற்படுவதாக தகவல்!

download 37
download 37

அஸ்ட்ராஜெனெகாவின் கொவிட்-19 தடுப்பூசியின் மூன்று டோஸ்கள் வேகமாக பரவி வரும் கொவிட்-19 மாறுபாடான ஒமிக்ரோனுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும் என்று ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வக தரவினை மேற்கோள்காட்டி மருந்து நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

எனினும் இந்த ஆய்வு மதிப்பாய்வு செய்யப்பட்ட மருத்துவ இதழில் இன்று வெளியிடப்படவில்லை.

பூஸ்டர் ஷாட்டுக்கு பிறகு ஒமிக்ரோனுக்கு எதிரான நோயெதிர்ப்பு அளவுகள் கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட மற்றும் இயற்கையாகவே அதிலிருந்து குணமடைந்தவர்களின் நோயெதிர்ப்புகளை விட அதிகமாக இருப்பதை ஆய்வு வெளிக்காட்டியுள்ளது.

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் மூன்று-டோஸ்களுக்கு பிறகு, ஒமிக்ரோனுக்கு எதிரான நடுநிலைப்படுத்தும் நிலைகள் இரண்டு டோஸ்களுக்குப் பிறகு டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக இருந்ததைப் போலவே இருந்தன என்றும் நிறுவனம் கூறியுள்ளது.