சந்திராயன்-3 விண்கலம் ஓகஸ்ட்டில் ஏவப்படுகிறது

Direxion Laucnhes New Innovator ETF Straight To The MOON 440x250 1
Direxion Laucnhes New Innovator ETF Straight To The MOON 440x250 1

சந்திராயன் -3 விண்கலம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதமளவில் விண்ணில் செலுத்தப்படவுள்ளதாக இந்திய அணுசக்தி, விண்வெளித் துறையின் இணை மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில், நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவர் வழங்கியுள்ள எழுத்துமூல அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன்-2 இல் பல்வேறு விடயங்களை கற்றுக்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், தற்போது சந்திராயன்-3 ஐ வெற்றிகரமாக விண்ணில் செலுத்துவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன் சோதனைகள் நிறைவுற்றதும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதமளவில் சந்திராயன்-3 ஐ விண்ணில் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இந்திய அணுசக்தி, விண்வெளித் துறையின் இணை மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார்.