போர்நிறுத்த முன்மொழிவை ரஷ்யா நிராகரித்ததாக யுக்ரைன் ஜனாதிபதி தெரிவிப்பு

President of Ukraine
President of Ukraine

இந்த வாரம், போர் நிறுத்ததுக்கான முன்மொழிவை ரஷ்யா நிராகரித்துள்ளதாக, யுக்ரைன் ஜனாதிபதி வொளொடிமிர் ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், யுக்ரைன் ஜனாதிபதியின் கூற்றை ரஷ்யா இதுவரையில் உறுதிப்படுத்தவில்லையென வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இதேநேரம், யுக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டொலர் மதிப்பிலான பாதுகாப்பு உதவிகளை வழங்க உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

கனரக ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் தந்திரோபாய ஆளில்லா விமானங்கள் என்பன யுக்ரைனுக்கு வழங்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, யுக்ரைனுக்கு தற்போது மாதமொன்றுக்கு 7 பில்லியன் டொலர் உதவி தேவைப்படுவதாக உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றுடன் இடம்பெற்ற கூட்டத்தில் யுக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்