போரில் தலையிட முயற்சிக்கும் நாடுகளுக்கு புட்டின் விடுக்கும் எச்சரிக்கை

putin
putin

யுக்ரைன் போரில் தலையிட முயற்சிக்கும் எந்தவொரு நாடும் ‘மின்னல் வேகத்தில்’ பதிலடியை எதிர்நோக்க நேரிடும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் எச்சரித்துள்ளார்.

‘யாரும் பெருமை கொள்ள முடியாத அனைத்து கருவிகளும் எங்களிடமும் உள்ளன’ எனவும் ‘தேவை ஏற்பட்டால் அதனை நாம் பயன்படுத்துவோம்’ எனவும் ரஷ்ய ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.

இது ஏவுகணை மற்றும் அணுவாயுத பயன்பாட்டை குறிப்பதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

யுக்ரைனின் நட்பு நாடுகள் யுக்ரைனுக்கான ஆயுத விநியோகத்தை விரைவுப்படுத்தியுள்ளன. யுக்ரைன் ரஷ்யாவை தோற்கடிப்பதை உறுதி செய்வதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது.

கடந்த வாரம், தலைநகர் கியிவ்வை சுற்றியுள்ள பகுதிகளில் வெளியேறிய ரஷ்யப் படையினர், டான்பாஸ் பகுதியைக் கைப்பற்ற கடுமையான தாக்குதலை நடத்தி வருகின்றது. எனினும் யுக்ரைனின் பதில் தாக்குதலை சமாளிப்பது ரஷ்யாவுக்கு கடினமான விடயம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.