யுக்ரைனில் போரை நிறுத்த தவறியுள்ளதாக ஐநா ஒப்புக்கொண்டுள்ளது

ஐ நா
ஐ நா

யுக்ரைனில் போரை தடுப்பதற்கோ அல்லது முடிவுக்கு கொண்டு வருவதற்கோ தமது நிறுவனமான பாதுகாப்புச் சபை தவறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டேரஸ்  விமர்சித்துள்ளார்.

இது ஏமாற்றம், விரக்தி மற்றும் கோபத்தின் ஆதாரமாகும் என யுக்ரைன் தலைநகர் கிவ் வில் நேற்று கருத்து தெரிவித்தபோது அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொண்டு, அந்த நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்திருந்தார்.

இதையடுத்து, யுக்ரைனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர், உக்ரைன் ஜனாதிபதி வொளொடிமிர் ஸெலன்ஸ்கியுடன் நேற்று நடத்திய கூட்டு ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பை நிலை நிறுத்துவதே பாதுகாப்பு சபையின் நோக்கமாகும்.

எனினும் பெப்ரவரி மாதம் முதல் உகரைனில் ஆரம்பமான படையெடுப்பை தடுப்பதற்கு தவறியுள்ளதாக யுக்ரைன் அரசாங்கம் உள்ளிட்ட தரப்பினரால் தாங்கள் விமர்சிக்கப்படுவதாகவும் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தாங்கள் கைவிடமாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்