ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் குறித்து இராஜாங்கத் திணைக்களம் குற்றம் சுமத்தல்

flag 973746 1280
flag 973746 1280

யுக்ரைன் மீதான ஆக்கிரமிப்பில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மிகவும் மோசமாக செயற்படுகிறார் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் குற்றம் சுமத்தியுள்ளது.

அதன் பேச்சாளர் ஜோன் கிர்பி இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

முன்னதாக ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்திருந்த உக்ரைன் ஜனாதிபதி வொளொடிமிர் ஸெலென்ஸ்கி, புட்டினினுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தாம் எப்போதும் தயார் எனக் குறிப்பிட்டிருந்தார்.

ரஷ்யாவில் ஒரு தனி நபர் அனைத்து தீர்மானங்களையும் மேற்கொள்வதால் ஜனாதிபதி புட்டினுடன் தாம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.