யுக்ரைனுக்கு மேலும் 150 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுத உதவிகள் வழங்க தயார் – ஜோ பைடன்

Joe biden USA 23062020
Joe biden USA 23062020

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், யுக்ரைனுக்கு மேலும் 150 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுத உதவிகளை அறிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு மேலதிக பீரங்கி குண்டுகள், ராடர்கள் மற்றும் பிற உபகரணங்களை வழங்கும் பாதுகாப்பு உதவியின் மற்றொரு தொகுப்பை தாம் அறிவிப்பதாக, ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, 3.4 பில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உதவிகளை யுக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது.

இதேநேரம், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் ஜி-7 நாடுகளின் தலைவர்கள், உக்ரைன் ஜனாதிபதி வொளொடிமிர் ஸெலென்ஸ்கி ஆகியோர், நாளைய தினம் தொலைகாணொளி மூலம் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.