தசாப்த காலத்திற்கு பின்னர் அவுஸ்திரேலியாவின் பிரதமர் ஒருவர் தொழில் கட்சியில் இருந்து தெரிவாகியுள்ளார்.
நேற்று இடம்பெற்ற அந்த நாட்டின் பொதுத் தேர்தலில் அந்த நாட்டின் தொழில் கட்சி சார்பில் போட்டியிட்ட அந்தனி அல்பனிஸ் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த தேர்தலில் லிபரல் கட்சி தலைவர் ஸ்காட் மொரிசன் மற்றும் தொழில் கட்சி தலைவர் அந்தனி ஆல்பனிஸ் ஆகியோருக்கு இடையில் போட்டி நிலவியிருந்தது.
இதற்கமைய, அவுஸ்திரேலியாவில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு மொத்த 151 உறுப்பினர் இடங்களில் 76 இனை கைப்பற்ற வேண்டியது அவசியமாகும்.
தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தொழில் கட்சி சார்பில் போட்டியிட்ட அந்தனி அல்பானிஸ் தலைமையிலான தொழில் கட்சி 72 இடங்களை கைப்பற்றியதுடன், 55 இடங்களை லிபரல் கட்சி வேட்பாளரான ஸ்கொட் மொரிசன் பெற்றுக்கொண்டார்.
15 இடங்களை சுயாதீன மற்றும் ஏனைய கட்சிகள் கைப்பற்றியுள்ளன.
இந்த தேர்தலில் இலங்கையில் பிறந்த பெண் ஒருவர் முதன்முறையாக அவுஸ்திரேலிய நாடாளுமன்றிற்கு தெரிவாகியுள்ளார்.
தொழில் கட்சி சார்பில் போட்டியிட்ட கெசென்ரா பெர்னாண்டா முதல் முறையாக இவ்வாறு நாடாளுமன்றிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.