கிவ் மீது ரஷ்யா மீண்டும் பல எறிகணை தாக்குதல்

1648701478422
1648701478422

யுக்ரைன் தலைநகர் கிவ் மீது ரஷ்யா மீண்டும் பல எறிகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இந்த தாக்குதல்களில் ஒருவர் உயிரிழந்ததுடன், 6 வயது சிறுமி உட்பட 6 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ரஷ்யா கிவ் நகரின் மீது ஆரம்பத்தில் தாக்குதல்களை நடத்தியிருந்தது.

எனினும், யுக்ரைன் துருப்பினரின் கடுமையான எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக ரஷ்யா அதிலிருந்து பின்வாங்கியதுடன், பின்னர் நகரின் மீது தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.

இந்த நிலையில், குறித்த நகரை முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

இதேவேளை, ஜெர்மனியில் ஜீ-7 நாடுகளின் தலைவர்களுக்கு இடையிலான மாநாடு இடம்பெற்று வரும் நிலையில், யுக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தொடர்பான விடயங்களை முன்னிலைப்படுத்தி கலந்துரையாடப்பட்டு வருகின்றது.

ரஷ்யாவுக்கு மேலும் பொருளாதார தடைகளை விதிப்பதற்கு இந்த மாநாட்டின் போது இணக்கம் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.