துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி ஜப்பானிய முன்னாள் பிரதமர் உயிரிழந்தார்!

c6cbda12 41028506 abe 850x460 acf cropped
c6cbda12 41028506 abe 850x460 acf cropped

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே காலமானதாக ஜப்பானின் தேசிய ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜப்பானின் நீண்ட காலம் பிரதமராக இருந்த 67 வயதான அபே, பிரசார உரையின் போது இன்று துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானார்.

இதனையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு மரணித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அபே மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் 40 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

இச்சம்பவம் இன்று(8) ஜப்பானிய நேரப்படி முற்பகல் 11.30 அளவில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, அபேயிக்கு பின்னால் இருந்த துப்பாக்கிதாரி முன்னாள் பிரதமரை நோக்கி இரண்டு முறை துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.