ஈரான் மீதான போரை கைவிட வலியுறுத்தி நியூயோர்க்கில் ஆர்ப்பாட்டம்!

no war
no war

ஈரான் மீது பொருளாதார தடைகள் விதிக்க வேண்டாம், போர் தொடுக்க வேண்டாம் என நூற்றுக்கணக்கான நியூயோர்க் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமெரிக்காவின் குண்டுத்தாக்குதலில் ஈரானிய இராணுவத்தளபதி கொல்லப்பட்டிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கின்ற வகையில் ஈராக்கில் அமைந்துள்ள அமரிக்க படைத்தளங்களின் மீது ஈரான்
ஏவுகணைத்தாக்குதலை நடத்தியது.

ஈரானின் இந்த செயற்பாட்டிற்கு இங்கிலாந்து கண்டனம் தெரிவித்திருந்ததுடன் இரு நாடுகளும் சமாதான முறையில் அமைதியினை கடைப்பிடிக்க வேண்டும் என பாப்பரசர் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான நியூயோர்க் மக்கள் ‘ஈரான் மீது போர் தொடுக்க வேண்டாம், நாங்கள் அமைதியை விரும்புகிறோம்’ போன்ற பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

‘ஈரானுக்கு எதிரான போருக்கும் உலக மக்கள் மீதான போருக்கும் நாங்கள் இங்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம்’ என்று பேரணியில் பங்கேற்ற ஒரு ஆர்வலர் கூறினார்.

அதேபோல் அதன் அருகில் உள்ள ஃபோயெலி சதுக்கத்தில் சமாதானவாதிகள் ‘முடிவற்ற போர்களை முடிவுக்கு கொண்டு வாருங்கள், போர் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வாருங்கள்’ என கோஷமிட்டனர்.

ஈராக் – அமெரிக்கா இடையேயான பதற்றமான சூழ்நிலைகள் தணிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அமெரிக்கா முழுவதும் 360 இடங்களில் பேரணி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.